Monday, May 09, 2011

செயல் திறன் கொண்ட இளைஞர்களே ! உங்கள் திறைமைகளை பட்டை தீட்டி கொள்ள ஓர் அரிய வாய்ப்பு?

சமுதாய சிந்தனையும், கொள்கை உறுதியும் கொண்ட இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! உங்கள் திறமைகளை பட்டை தீட்டிக்கொள்ளவும், சமூக மார்க்க விஷயங்களை பற்றி புரிதலை ஏற்படுத்தவும் ஜூன் மாதத்தில் தமுமுக  மாணவரணி சார்பில் குளுகுளு மலைப்பிரதேசம் ஒன்றில் மாணவர் பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.

+2 வகுப்பு முடித்தவர்கள் கல்லூரி மாணவர்கள் மற்றும் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை.தங்கள் விபரங்களை வெள்ளை தாளில் எழுதி அனுப்பவும்.கடைசி தேதி 25.05.2011

முகவரி:
மாணவரணி பயிற்சி முகாம் 2011
7, வடமரைக்காயர் தெரு, மண்ணடி, சென்னை.1.
செல் : 9841678783

வழக்கறிஞராக வேண்டுமா?

சமூகத்தில் நடக்கும் அநீதிகளைத் தட்டிக் கேட்கவும், மனித உரிமைகளைக் காத்திடவும் துடிப்புள்ள வழக்கறிஞராக ஆசையா?உங்களுக்கு உதவ தமுமுக மாணவரணி தயாராக இருக்கிறது.சட்டக் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு ஆலோசனையும், தகுதியுள்ள ஏழை முஸ்லிம் மாணவர்களுக்கு கல்விக் கட்டணமும்  வழங்கப் படும்.
தமுமுக மாணவரணி
செல் - 9841678783

Monday, February 28, 2011

பஸ்டே கொண்டாட்டத்தை தடை செய்க! தமுமுக மாணவரணி கோரிக்கை!

தமுமுக மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் ஜைனுல் ஆபிதீன் வெளியிட்டுள்ள  அறிக்கை.

"பஸ் டே" என்ற பெயரில் சென்னையில் கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்தை வாடகை எடுத்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் பஸ்ஸின் உள்ளேயும், கூரை மேலும் ஏறி நின்று ஆட்டம் போடுவதும் பொதுமக்களுக்கு இடையூறு செய்வதும், பாதுகாப்புக்கு வந்த போலீசார் மீது கல்வெறிவதும் வன்மையாக கண்டிக்கதக்க ஒன்று.

உயர்நீதிமன்றம் ‘பஸ்டே’ கொண்டாடட்பவருக்கு தடை போட்டிருந்தும் காவல்துறை மாணவர்களின் அராஜகத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும் மாணவர்களின் கல்லெறிக்கு உள்ளாவதும் காவல்துறையின் கண்ணியத்தை காப்பாற்ற கூடியதல்ல.

மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக போராட்டம், நடத்தப்படுகையில் அவர்களை ஒடுக்கும் தமிழக அரசும், காவல்துறையும் ‘பஸ் டே’ விஷயத்தில் மென்மையாக நடந்துக் கொள்வது மாணவர்களிடையே போக்கிரித்தனத்தையே உருவாக்கும்.

எனவே தமிழக அரசு "பஸ் டே" கொண்டாட்டங்களை நிரந்தரமாக தடை செய்வதோடு இது போன்ற போக்கிரி செயலில் ஈடுபடும் மாணவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமுமுக மாணவரணி கேட்டுக் கொள்கிறது.

மனித நேய மக்கள் கட்சிக்கு தேர்தல் நிதி தாரீர்!

மாணவ தோழர்களே!மனித  நேய  மக்கள் கட்சிக்கு மாணவரணி சார்பில்  தேர்தல் நிதியை வசூலித்து அளிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.கல்லூரி வளாகங்கள்,சொந்தங்கள்,நண்பர்கள்,ஜமாதினரிடம் மனித நேய மக்கள் கட்சிகாக தேர்தல் நிதியை வசூலித்து அளிக்குமாறும் மேலும் தொடர்புக்கு மாநில தலைமையை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுகொள்ளபடுகிறது.
தொடர்புக்கு :  9994292932,9841678783

மாதிரி நோட்டிஸ்  கீழே

     நிதி தாரீர்.

Tuesday, February 22, 2011

திருச்சியில் கல்வி வழிகாட்டி முகாம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் திருச்சி மாவட்டம் 49 வது வார்டு ஆழ்வார்தோப்பு கிளை மாணவரணி சார்பாக 10 மற்றும் 12 வகுப்பு மாணவ மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டி முகாம் 19.02.2011 சனிக்கிழமை மாலை 7 மணியளவில் திருச்சி தென்னுர் இக்ரா மினி ஹாலில் நடைபெற்றது.மாநில செயலாளர் சகோ.பேரா.ஹாஜாகனி மற்றும் இ.ஆர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சத்திய மூர்த்தி ஆகியோர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்இம்முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Wednesday, January 19, 2011

வடசென்னையில் மாணவர் எழுச்சிப் பொதுக்கூட்டம்!




வடசென்னை மாவட்டம் ஆர்.கே நகர் பகுதி 4-வது வட்டம் தமுமுக சார்பாக செரியன் நகரில் மாணவர் எழுச்சி பொதுக்கூட்டம் 09-01-2011 அன்று நடைபெற்றது. இதில் மாநில மாணவரணி செயலாளர் ஜைனுல் ஆபிதீன் இந்திய அரசியலும், மாணவர்களும் என்ற தலைப்பிலும், மாணவரணி பொருளாளர் மாயவரம் அமீன் கல்வியும், சமூகமும் என்ற தலைப்பிலும் உரையாற்றினர். 4வது வட்ட மாணவரணி செயலாளர் அயூப்கான் தலைமை வகித்தார். 4&வது வட்ட இளைஞர் அணி செயலாளர் எஸ்.பீர் முகம்மது, வரவேற்புரையாற்றினார்.வட்ட மாணவரணி துணை செயலாளர் கதீபுதீன் நன்றியுரை ஆற்றினார். மாவட்ட தலைவர் உஸ்மான், மாவட்ட மாணவரணி செயலாளர் வகீல், ஆர்.கே.நகர் பகுதி தலைவர் ஐ.எஸ்.ஹமீது, பகுதி செயலாளர் ஜமாலுதீன், பகுதி மாணவரணி செயலாளர் ஏ.அப்துல் ரசாக் உள்பட நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

Thursday, September 23, 2010

இலவச BPO பயிற்சி மற்றும் வேலை

முஸ்லிம் மாணவர்களுக்கு இலவச பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அளிக்கபடுகிறது.
படிப்பு : +2 , டிப்ளொமா, டிகிரி
வயது : 18 க்கு மேல்
சம்பளம் : மாதம் 8 ஆயிரத்தில் இருந்து
குடும்பத்தின் வருட வருமானம் : ஒரு லட்சம்.

சாதிசான்றிதழ் மற்றும் வருமான சான்றிதழுடன் கீழ் காணும்  முகவரிக்கு நேரடியாக சென்று இன்டெர்வியுவில் கலந்து கொள்ளலாம்.
தொடர்புக்கு :
இம்ரான்(9790936658) No: 10,P.T.Rajan Salai,K.K.Nagar,Chennai-78. Contact : 044-42005095

Wednesday, July 14, 2010

சிறுமலையில் ஓர் சீரிய முகாம்!

தமிழ்நாடு முஸ்லிம்  முன்னேற்றக் கழகத்தின்  மாணவரணி சார்பாக கல்லூரி மாணவர்களுக்கான ஆளுமைத்திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் கடந்த ஜூன் 3,4,5,6 தேதிகளில் திண்டுக்கல் அருகில் 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிறுமலை எனும் இயற்கை எழில் சூழ்ந்த மலைப் பிரதேசத்தில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 50 கல்லூரி மாணவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டனர்.

கல்லூரி மாணவர்களுக்கு மார்க்கம், சமூகம், அழைப்புப்பணி, சட்டம் என பல்வேறு தலைப்புகளில் பாடங்கள் நடத்தப்பட்டன. கேள்வி  பதில் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேரா.ஜவாஹிருல்லாஹ், மௌலவி.முஜிபுர்ரஹ்மான் உமரி, மௌலவி இஸ்மாயில் ஸலபி, சகோ.தேவநேயன்,சகோ.ரயிசுத்தீன்,சகோ.தமிமுன் அன்சாரி, வழக்கறிஞர் ஜைனுல் ஆப்தீன், மௌலவி. சதக்கத்துல்லாஹ் ஆகியோர் மாணவர்களுக்கு கலந்துரையாடல் பாணியில் வகுப்பெடுத்தனர்.

உரைகள் மட்டுமல்லாது மாணவர்களே பங்கேற்கும் படியான பல்வேறு புதுமையான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. சையது அ­, ஷாஜஹான், சிவகாசி முஸ்தபா, மௌலவி நூரி, முத்துப் பேட்டை அலீம் ஆகியோர் மேற் பார்வையாளர்களாக நியமிக்கப் பட்டனர்.

ஒவ்வொரு அணியும் தங்கள் அணி சார்பில் பத்திரிக்கை வடிவமைத்தல், சொற் பயிற்சி, பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுதல் என பல பயனுள்ள செயல் பாடுகளில் பங்கேற்க பயிற்சி அளிக்கப்பட்டனர் மாணவர்களே பங்கு கொண்ட ''வரதட்சணை அதிகரிக்கக் காரணம் பெற்றோரா? மணமகனா?'' என்ற தலைப்பில் பட்டி மன்றமும் நடைபெற்றது. மௌலவி இஸ்மாயில் ஸலபி அவர்கள் பட்டி மன்றத்தின் நடுவராக இருந்து பட்டி மன்றத்தை வழி நடத்த, மாணவர்கள் தங்கள் கூரிய வாதங்களை முன்வைத்து வாதாடி பட்டி மன்றத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்றனர்.

செப்டம்பர் 11 தாக்குதல்  உண்மைப்பின்னணி, பாலஸ்தீன அவலம், சங்பரிவார் செயல்திட்டம் என ஆவணப்பட  காட்சிகள் புரொஜக்டர் மூலம் மாணவர்களுக்கு காட்டப்பட்டன. இதன் மூலம் பல்வேறு புதிய விவரங்களை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.

ஐவேளைத் தொழுகையுடன், குர்ஆன் வகுப்புகள், குர்ஆன் ஓதுவதற்கான பயிற்சி, வினாடி  வினாப் போட்டிகள், பொது அறிவுத் தேர்வு என கலகலப்பாக நடைபெற்ற பயிற்சி முகாம் ஜூன் 6 ம் தேதி மாலையுடன் முடிவுற்றது.

முகாமின் இறுதியில் ஒவ்வொரு மாணவரும் இம் முகாமில் பங்கேற்றது குறித்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். தங்கள் மார்க்க, சமூக புரிந்துணர்வில் இம்முகாம் ஒரு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தனர்.

தமுமுக மாணவரணி சார்பாக 2008ம் வருடம் ஊட்டியில் நடை பெற்ற முகாமுக்கு பின்னர் சீரிய முகாமாக சிறுமலை முகாம் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

முகாமின் காப்பாளர்களாக J.S.ரிபாயி அவர்களும்,தென்காசி மிஸ்பாஹி அவர்களும்  செயல் பட்டனர்.திண்டுக்கல் மாவட்ட தமுமுகவினர் மாவட்டத் தலைவர் ஹபீப் முஹம்மது தலைமையில் உணவு மற்றும் தங்குமிட ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

தமுமுக மானவரணியை சேர்ந்த நான்கு பேருக்கு B.L சீட்

சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்ட பலகலைகழகத்தில் 9 .07 .2010 அன்று நடைபெற்ற ஐந்து வருட (B.L)சட்ட படிப்புக்கான கவுன்சிலிங்கில்  தமுமுக மாணவரணியை   சேர்ந்த சகோதரர்கள் நான்கு பேருக்கு டாக்டர் அம்பேத்கர் சட்ட கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.வருங்கால வழக்கறிஞர்களை வாழ்த்துவோம்.

Monday, July 05, 2010

வாக்களர் பட்டியலில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா ?

வாக்களர் பட்டியலில் நமது சமுதாயத்தை சேர்ந்தவர்களின் பெயர்களை வேண்டும் என்றே சேர்க்காமல் விட்டுவிடும் போக்கு தொட்ரகிறது.அதே நேரத்தில் நம் சமுதாயத்தை சேர்ந்தவர்களும் அலட்சிய போக்கோடு நடந்து வருகின்றனர்.நமது அரசியல் உரிமைகளை பெற நாம் வாக்களர் ஆவது முக்கியம்.எனவே உடனடியாக உங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வோம்.மாணவரணியினர் இது குறித்து நோட்டீஸ் அடிப்பதோடு தனிநபர் பிரச்சாரம் செய்ய வேண்டும்.வாக்களர் பட்டியலில் பெயரை சேர்க்க விழிப்புணர்வு பிரசாரம் செய்வோம்.வாக்களர் பட்டியலில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா என்று சரிபார்க்க
  http://www.elections.tn.gov.in/pdfs/acwise_pdf.asp

Monday, June 28, 2010

தமிழக அரசின் 2010-2011 ஆண்டிற்கான கல்வி உதவி தொகை

தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோருக்கான 2010-2011 ஆண்டிற்கான கல்வி உதவி தொகையை அறிவித்து உள்ளது .
இந்த கல்வி தொகை 3 நிலைகளாக உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது


1 - 10 வகுப்பு வரை
தகுதிகள் :
*
கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
*
குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
*
வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது
*
ஒரு குடும்பத்தில் 2 பேருக்கு மேல் விண்ணப்பிக்க கூடாது

பயன்கள் :
*
கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3500 ரூபாய்
*
சேர்கை கட்டணம் அதிகபட்சமாக 500 ரூபாய்
*
விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு
*
கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
*
ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.62 கோடி

சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
*
சாதி சான்றிதல் நகல் (xerox)
*
பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
*
வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10
புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26

கூடுதல் தகவல்கள் :
* புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (prematric_fresh_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்
*
ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை , இணைக்கப்பட்டுள்ள புதுப்பித்தல் விண்ணப்பத்தை (Renewal form) (prematric_renewal_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
*
பூர்த்தி செய்யப்பட வினப்பதை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்
11, 12 , ITI, டிப்ளமோ , ஆசிரியர் பயிற்சி , பட்ட படிப்பு , பட்ட மேற்படிப்பு , ஆராய்ச்சி படிப்பு (Ph.D)

தகுதிகள் :
*
கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
*
குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
*
வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது

பயன்கள் :
*
கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3000 முதல் 7000 வரை
* 30%
கல்வி உதவி பெண்களுக்கு வழங்கப்படும்
* விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு
* கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
*
ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.60 கோடி

சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
*
சாதி சான்றிதல்
* பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
*
வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
* உங்கள் மதிப்பெண் சான்றிதல் (Marksheet) நகல்களை (Xerox) இணைத்து அனுப்புவது சிறந்தது

சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10
புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26

கூடுதல் தகவல்கள் :
* புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (prematric_fresh_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்
*
ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை , புதுப்பித்தல் விண்ணப்பம் (Renewal form) (prematric_renewal_ appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
* பூர்த்தி செய்யப்பட வினப்பதை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்
தொழிற்படிப்புகள் ( Engineering )


தகுதிகள் :
*
கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
* குடும்ப ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
* வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது

பயன்கள் :
* கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 20000 ரூபாய் அல்லது முழு கட்டணம் (இரண்டில் குறைந்தது )
* IIT (
சென்னை ), NIT(திருச்சி ) , Indian Institute of Tech and Design managment (காஞ்சிபுரம் ), national Institute of fashion Technology ஆகிய கல்வி கூடங்களில் பயிலும் மாணவர்களுக்கு முழு கல்வி உதவி வழங்கப்படும்
* 30% கல்வி உதவி பெண்களுக்கு வழங்கப்படும்
* விடுதி மற்றும் ஊக்க தொகைகள் வருடத்திற்கு 10000 வரை
* கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
* ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 8 கோடி

சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
*
சாதி சான்றிதல்
* பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
*
வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
* உங்கள் மதிப்பெண் சான்றிதல் (Marksheet) நகல்களை (Xerox) இணைத்து அனுப்புவது சிறந்தது

சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10
புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26

கூடுதல் தகவல்கள் :
* புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (MCM_Appln_form) விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்
*
ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை , புதுப்பித்தல் விண்ணப்பத்தை (mcm_renewal_ claim) பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
*
பூர்த்தி செய்யப்பட விண்ணப்பத்தை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்

மேலும் விவரங்களுக்கு இந்த இணையதளத்தை பார்க்கவும் : http://www.tn. gov.in/bcmbcmw/ welfschemes_ minorities. htm

Thursday, June 17, 2010

மூன்றாண்டு B.L. விண்ணப்பங்கள்

2010 வருடத்திற்கான அரசு சட்ட கல்லூரியில் மூன்றாண்டு   B.L., படிப்பில் சேர்வதற்காக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.எனவே பட்டபடிப்பு(டிகிரி) முடித்த 30 வயதுக்குட்பட்ட மாணவர்கள் உடனடியாக தங்கள் அருகில் உள்ள சட்ட கல்லூரிகளில் (சென்னை,திருச்சி,நெல்லை,மதுரை,செங்கல்பட்டு,கோவை,சேலம்(தனியார்)விண்ணப்பத்தை பெற்று உடனடியாக விண்ணபிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.கடைசி தேதி 20.07.2010,தகுதியுள்ள ஏழை முஸ்லிம் மாணவர்களுக்கு கல்விக் கட்டணமும்  வழங்கப் படும்.மேலும் விவரங்களுக்கு தமுமுக மானவரணியை தொடர்பு கொள்ளவும்.
காஞ்சி மு. ஜைனுல் ஆபிதீன். M.A.,B.L
(மாநில மாணவரணி செயலாளர்)
செல் - 99942 92932

Monday, June 07, 2010

B.A.B.L., ஐந்து ஆண்டு படிப்புக்கு விண்ணப்பங்கள்

2010 வருடத்திற்கான அரசு சட்ட கல்லூரியில் ஐந்து ஆண்டு  B.A.B.L., படிப்பில் சேர்வதற்காக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.எனவே பனிரெண்டாம் வகுப்பு (+2 )முடித்த ,21 வயதுக்குட்பட்ட மாணவர்கள் உடனடியாக தங்கள் அருகில் உள்ள சட்ட கல்லூரிகளில் (சென்னை,திருச்சி,நெல்லை,மதுரை,செங்கல்பட்டு,கோவை,சேலம்,மற்றும் புதுச்சேரி)விண்ணப்பத்தை பெற்று உடனடியாக விண்ணபிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.மேலும் விவரங்களுக்கு தமுமுக மானவரணியை தொடர்பு கொள்ளவும்.

வழக்கறிஞராக வேண்டுமா?

சமூகத்தில் நடக்கும் அநீதிகளைத் தட்டிக் கேட்கவும், மனித உரிமைகளைக் காத்திடவும் துடிப்புள்ள வழக்கறிஞராக ஆசையா?உங்களுக்கு உதவ தமுமுக மாணவரணி தயாராக இருக்கிறது.சட்டக் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு ஆலோசனையும், தகுதியுள்ள ஏழை முஸ்லிம் மாணவர்களுக்கு கல்விக் கட்டணமும்  வழங்கப் படும்.
காஞ்சி மு. ஜைனுல் ஆபிதீன். M.A.,B.L
(மாநில மாணவரணி செயலாளர்)
செல் - 99942 92932

Thursday, May 27, 2010

மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவி ஜாஸ்மினுக்கு தமுமுக கவுரவிப்பு!

பத்தாம் வகுப்பு தேர்வில் 500 க்கு 495 பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்ற நெல்லை மாணவி ஜாஸ்மினுக்கு தமுமுக நிர்வாகிகள் நேரில் சென்று பதக்கம் அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.மேலும் தமுமுக தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ் அவர்களும் போனில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்தை தெரிவித்தார்.மேலும் பத்தாம் வகுப்பு தேர்வில் இந்தாண்டு 500/493மதிப்பெண் பெற்று பாத்திமா என்ற பெண் மாநிலத்தில் மூன்றாவது இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி! தமிழக அரசு அறிவிப்பு!


குடும்பத்தில் முதல் பட்டதாரியான மாணவர்கள் தொழிற்கல்வி பயிலும் போது, கல்விக் கட்டணத்தை அரசே ஏற்பது தொடர்பான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் தொழிற்படிப்பிற்கு விண்ணப்பிக்கும் போது, உறுதிமொழிப் படிவம் மற்றும் வருவாய்த் துறையில், 'குடும்பத்தில் முதல் பட்டதாரி' என சான்றிதழ் பெற்று விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

'அரசு மற்றும் தனியார் பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், வேளாண்மை, கால்நடை, சட்டக் கல்லூரிகளில் கவுன்சிரிங் மூலம் சேரும் மாணவர்களுக்கு, அவர்களது குடும்பத்தில் இதுவரை யாரும் பட்டதாரிகள் இல்லையெனில், தொழிற்கல்வி படிப்பை ஊக்குவிக்க சாதி பாகுபாடின்றி, வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், வரும் கல்வியாண்டு முதல் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ளும்' என, ஜனவரியில் சட்டசபை கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

உயர்கல்வித் துறை செயலர் கணேசன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

வரும் 2010லி11ம் கல்வியாண்டு முதல், பட்டதாரிகளே இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த தொழிற்கல்வி பயிலும் மாணவ, மாணவியரின் கல்விக் கட்டணச் செலவை அரசே ஏற்கும்.கல்விக் கட்டணம், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி களுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தையும், தனியார் கல்லூரிகளுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு நிர்ணயிக்கும் கட்டணத்தையும், பல்கலைக் கழக பாடப் பிரிவுகளுக்கு பல்கலைக் கழகம் நிர்ணயிக்கும் கட்டணத்தையும் குறிக்கும்.

கவுன்சிரிங் முறையில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த, பட்டதாரி இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கே இத்திட்டம் பொருந்தும். முந்தைய ஆண்டுகளில் சேர்ந்து படித்து வரும் மாணவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது.

குடும்ப நபர்கள் என்பது, தாய், தந்தை, அவர்களது பெற்றோர், மாணவர்களின் உடன்பிறப்புகளை குறிக்கும்.

தங்கள் குடும்பத்தில் பட்டதாரிகளே இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில், மாணவர்கள் வசிக்கும் பகுதியின் வருவாய்த் துறை தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தகுதிக்கு குறையாத அலுவலரிடம் சான்றிதழ் பெற்று அளிக்க வேண்டும்.
மாணவர்கள் தொழிற்கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது, விண்ணப்பத்துடன் குடும்பத்தில் முதல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர் என்ற சான்றிதழையும், உறுதிமொழிப் பத்திரத்தையும் அளிக்க வேண்டும்.

சான்றிதழ்களை சரி பார்த்து, தவறான சான்றிதழ்கள் அளிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மீது, மாணவர் எந்த வகையான தொழிற்கல்வி பயில அனுமதிக்கப்பட்டாரோ அதை அனுமதித்த அலுவலர் ஃ அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவரின் கல்விக் கட்டணத்தை கல்வி நிறுவனம் அரசிடமிருந்து பெற, அக்கல்வி நிறுவனம் எந்தத் துறையின் கீழ் வருகிறதோ அந்த துறையின் இயக்குனரகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

'குடும்பத்தில் பட்டதாரி எவரும் இல்லை' என்ற சான்றிதழுடன், மாணவரும், பெற்றோரும் கூட்டாக உறுதிமொழி அளிக்க வேண்டும்.

இந்த உறுதிமொழிச் சான்றிதழ் தவறு என தெரிய வந்தால், தவறான தகவல் அளித்ததற்காக மாணவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள், மூன்று மடங்காக மாணவர் அல்லது பெற்றோரிடமிருந்து வசூலிக்கப்படும்.

உறுதிமொழி வரைவுப் படிவம், வருவாய்த் துறையிடம் பெற வேண்டிய சான்றிதழ் படிவம் ஆகியவை தொழிற்கல்விக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் படிவத்துடன் அளிக்கப்படும். இவ்வாறு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

40 சதவீதம் பேர் பயனடைவர்

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பொறியியல் கவுன்சிரிங்கில் கலந்து கொள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

கடந்த ஆண்டுகளில் பெறப்பட்ட விண்ணப்பங்களில், மாணவர்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரியா என்ற விவரமும் கேட்கப்பட்டது. அதன்படி, 40 சதவீத மாணவர்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் என தெரிய வந்துள்ளது.சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்களிடம் சேகரிக்கப்பட்ட தகவரிலும் 40 சதவீத மாணவர்கள், குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் என தெரிய வந்துள்ளது. இதர தொழிற்கல்வி படிப்புகளிலும் இதே நிலையே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், வேளாண்மை, கால்நடை, சட்டம் ஆகிய தொழிற்கல்வி படிப்புகளில் சேருபவர்களில் 40 சதவீதம் பேர் குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருப்பர் என்றும், தமிழக அரசின் இச்சலுகை மூலம் ஆண்டுதோறும் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மாணவர்கள் பயனடைவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குடும்பத்தில் முதல் பட்டதாரி என்ற விவரம் ஆவணங்களுடன் கேட்கப்படுவதால், இந்த எண்ணிக்கை சற்று குறையவும் வாய்ப்புள்ளது.


புளியங்குடியில் மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம்

நெல்லை மாவட்டம் புளியங்குடி நகர தமுமுக சார்பில் பள்ளிக்கூட மாணவர்களுக்கான கோடைகால இஸ்லாமிய பயிற்சி முகாம் மே 11, 12, 13 ஆகிய மூன்று நாட்கள் புளியங்குடியில் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சி நெல்லை மாவட்ட துணைச் செயலாளர் எம். சுல்தான் மைதீன் தலைமையிலும், தமுமுக நகர பொருளாளர் பி.என்.எம்.எஸ். செய்யது மேற்பார்வையிலும் நடைபெற்றது. இம்முகாமில் மவ்லவி காசிம் பிர்தவ்ஸி, தமுமுக நெல்லை மாவட்டப் பொருளாளர் புளியங்குடி எஸ். செய்யது அலி, மஸ்ஜிதுர் ரஹ்மான் இஸ்மாயில் பிர்தவ்ஸி, சகோதரர் அப்துல் காதர் ஆகியோர் வகுப்பெடுத்தனர். இம்முகாமில் சுமார் 50 மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.